இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தமிழக மீனவர்கள் 11 பேர் 8ஆம் தேதி விடுதலை!

E-mail அச்செடுக்க
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரும் திங்கள் கிழமையன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய இலங்கை கடல் எல்லையில் நவம்பர் 8ஆம் தேதி இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இது தொடர்பாக இலங்கை அரசிடமிருந்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது என்று கடலோர காவல் படையின் மண்டபம் பகுதி கமாண்டர் சைனி கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தற்போது இலங்கை நெடுந்தீவில் உள்ள இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் ஜெகதபட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த 3ஆம் தேதி கைது செய்ததாக இலங்கை அரசு கூறியது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்