தேசத் தந்தை காந்தியை மகாத்மா காந்தி என்று நான் கூறமாட்டேன் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு அவர் கூறினார்.கமல் ஹாஸனின் 56ஆவது பிறந்த நாளை ஒட்டி, கடந்த 5ஆம் தேதி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக "காஃபி வித் அனு" என்ற நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடத்திய அனுஹாஸன் கமல் ஹாஸனிடம், நம் நாட்டில் இன்னொரு காந்தி மகான் உருவாகவில்லையே என்று நீங்கள் எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? என்று கேள்வி கேட்டார்.
இதற்குப் பதில் அளித்த கமல் ஹாஸன், இல்லை என்று கூறினார். நான் காந்தியின் மிகப்பெரும் விசிறி. திரு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தேசத் தந்தை காந்திபோன்றவாறு காந்தியைக் குறிப்பிட நான் தயாராக உள்ளேன். ஆனால் மகாத்மா என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன். ஏனெனில், மகாத்மா என்று குறிப்பிட்டு, அந்நியப்படுத்தி, அவர் போன்று வேறு ஒரு நபர் வரமுடியாது என்பது போன்று கட்டமைப்பது இந்தச் சமுதாயத்திற்குச் செய்யும் மிகப்பெரும் துரோகம் என்று கூறினார்.
காந்தி மாதிரி வேறு ஒரு ஆள் இல்லையே? என்று நாம் எங்கெல்லாமோ தேடிக் கொண்டிருக்கிறோம். பச்சைக் கிணறான நாடாளு மன்றத்தில் காந்தி போன்றோரைத் தேடினால் கிடைக்க மாட்டார்கள். அந்த கிணற்றில் இருக்கும் தவளைகள்தான் கிடைக்கும். காந்தி போன்றவர்களைத் தேட வேண்டுமானால் சாலைக்கு வாருங்கள். சாலையோரம் உள்ள மக்களில் தேடுங்கள். சேரிகளில் தேடுங்கள். கிடைப்பார்கள்.
அமைதியாக வேலை செய்து கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, காந்தி போன்றோர் இல்லாமல் இல்லை. அரசியலில் காந்தி போன்றோர் இல்லைதான். அது அரசியலின் துரதிருஷ்டம். ஆனால் நம் நாட்டில் காந்தி போன்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் நாம் அவர்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே, காந்தி இல்லை என்ற குறை எதுவும் இல்லை. அதற்கான வித்தை அவர் விதைத்து விட்டுச் சென்றுள்ளார் என்று கமல் ஹாஸன் கூறினார்.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாஸனின் பிறந்த நாளை ஒட்டி, அவரது நற்பணி இயக்கத்தைச் சார்ந்த 200 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வது தொடர்பான உறுதிமொழிப் பத்திரங்களை சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது வழங்கினார்கள்.
கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துக்கள் (3)

எழுதியவர்: haja jahabardeen, November 08, 2010
this is not important news , he is a not true man , he is fool star .like rajini star .
எழுதியவர்: ram, November 08, 2010
karvam ulla yaarum mahathmaa pondrorai avarum ennai pondravarthaan endru solvathu saatharanamee. Mahathmaa, Ivar(Kamalahasan) sonnathai pondru theruvoramum, seriyilum mattume irunthu irunthaal avarai yaarum mahathmaa endru alaitthirukka maattargal. Athayum meeriya..Nalla panbum, sakthiyum avaridam irunthathanaal thaan avar mahathmaa aanaar.
Ithupondra karuthakkalai "Mahathmaavai naan mahathaa endru kooramatten" veliyiduvathaye enaai pondror thavaraga ninaikkirom.
Sila padangalil peyar pettra ivarellaam "Ulaga Naayaganaam". Indhiya thesathukku than uyirayum kodutha...mahathmaa, mahathmaa illayaam. Ithu pondra karutthukkalai thayavu seithu ithodu niruthi kollavum.
Ithupondra karuthakkalai "Mahathmaavai naan mahathaa endru kooramatten" veliyiduvathaye enaai pondror thavaraga ninaikkirom.
Sila padangalil peyar pettra ivarellaam "Ulaga Naayaganaam". Indhiya thesathukku than uyirayum kodutha...mahathmaa, mahathmaa illayaam. Ithu pondra karutthukkalai thayavu seithu ithodu niruthi kollavum.
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|





paasisa kolkai ulla naatthika mukamoodi pottavar eppadi sammadhippaar