இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ராசா ஏன் பதவி விலக வேண்டும்? இளங்கோவன் கேள்வி!

E-mail அச்செடுக்க

2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்  1 .76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் சட்ட ஆலோசனைகளை பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராசா மீது குற்றம்சாட்டி  மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் மத்திய அமைச்சர் ராசாவின் பதவி பறிக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த திமுக செய்தித் தொடர்பாளரும் மக்களவை உறுப்பினருமான  டி. கே.எஸ். இளங்கோவன், அரசின் விதிகளை பின்பற்றியே மத்திய அமைச்சர் ராசா 2G  அலைவரிசையை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் பதவியை ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய தகவல் தொலை தொடர்பு ஆணையத்தின் விதிகளை மீறி எதுவும் நடைபெற வில்லை என்றும் இது குறித்த சி.பி.ஐ விசாரணை முதலில் முடியட்டும் அது வரை ஒவ்வொருவரும் பொறுத்து இருக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: bala, November 11, 2010
your are not telling news but already you came to a conclusion and spreading it.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்