புதுடெல்லி: பரபரப்பான நிலையில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக கூறிய ஜெயலலிதாவின் பேட்டி குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில்..
காங்கிரஸ் கூட்டணியில் அதிமுகவிற்கு எங்கே இடமிருக்கிறது. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதற்கும், மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார்.
ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு குறித்து காங்கிரஸ் அளித்துள்ள கருத்து, அதிமுக தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது. இதே நேரத்தில் ஜெயலலிதா அறிவிப்பு, அதிமுக கூட்டணியில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




