இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சோனியா பற்றிய சுதர்ஸன் கருத்துக்கு ஆர்எஸ்எஸ் வருத்தம்!

E-mail அச்செடுக்க
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறித்து தரக்குறைவாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்ஸன் கூறிய கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்தக் கருத்துக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பு இல்லை; அது அவரது சொந்தக் கருத்து எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறியுள்ளது.

சோனியா காந்தி குறித்து சுதர்ஸன் கூறிய கருத்துகள் காங்கிரஸ் கட்சியினரின் மனதைப் பாதித்துள்ளதை அறிந்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த கருத்தைத் தொடர்ந்து நிகழ்ந்தவை துரதிருஷ்டமானவை என்று ஆர்எஸ்எஸ்ஸின் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி கூறியுள்ளார்.

அனைவரும் அமைதி காக்குமாறும் பொறுமையுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பிரச்சனையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிலையே எங்கள் கட்சியின் நிலையும் என்று பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்