இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காங்கிரஸ் கடும் எதிர் விளைவுகளை சந்திக்கும்! பாஜக எச்சரிக்கை

E-mail அச்செடுக்க

புதுடெல்லி: காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை தொடர்ந்து தாக்குவதை நிறுத்தாவிடில் அது கடும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பாஜக எச்சரித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசியதற்காக ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்சனின் கருத்து குறித்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-தலைவர்கள் உரிய விளக்கங்களை அளித்தும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களால் ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

இத்தகைய தாக்குதலை நிறுத்துமாறு தனது தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைமை கட்டளையிட வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், நாடு முழுவதும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு ஊழல் விவகாரங்களை முன்னிறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சிமி இயக்கத்துடன் தொடர்புபடுத்தி பேசுவதையும் காங்கிரசார்  நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்..

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் துவிவேதி வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் தொண்டர்கள் தில்லி, அகோலா, அலாகாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.  பாஜகவினரின் பொறுமையை காங்கிரஸ் கட்சி சோதிக்கக் கூடாது. இதைத் தொடர்ந்து செய்தால் உரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றா தருண் விஜய்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: indian, November 14, 2010
தேச பிதா மஹாத்மா வை 1948ல் ஆர் எஸ் எஸ் கயவன் கோட்சே சுட்டுக் கொலை செய்தான். அதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம். அன்றே இந்த ஆர் எஸ் எஸ் யை அழித்த்திருந்தால் நம் தேசத்தில் எந்த அச்சுறுத்தலும் தீவிரவாதமும் இருந்திருக்காது. சிமி யை ஆர் எஸ் எஸ் அமைப்பான பிஜெபி அரசுதான் தடை செய்தது. ஆனால் இதுவரை எந்த கோர்ட்டிலும் அதை நிரூபிக்கப்படவில்லை. அதே சமயம் நாட்டில் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புகளுக்கும் நாசவேலைகளுக்கும் ஆர் எஸ் எஸ் தான் காரணம் என்பதை நாடே நன்கறியும். ஆர் எஸ் எஸ் யை அழித்து விட்டால் பாருகுள்ளே நல்ல நாடு நம் பாரத நாடுதான்.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்