இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தீவிரவாத செயலில் கைதான இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் - காங்கிரஸ்

E-mail அச்செடுக்க

நாக்பூர்: நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்துக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் இது குறித்து  அவர் பேசுகையில், முஸ்லீ்ம்களை தேச விரோதிகள் என்று தொடக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைதான இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ். என்ன பதில் சொல்லப் போகிறது.


முஸ்லீம்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள், அடைக்கலம் தருகிறார்கள் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானால் சதி நடக்கிறது என்று கூக்குரலிடுகிறது.  நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். முஸ்லீம்களும் அவர்களுடன் கை கோர்த்து நாட்டை வலிமைப்படுத்த பாடுபட வேண்டும் என்றார் திக்விஜய் சிங்,

 

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: indian, November 14, 2010
தேச பிதா மஹாத்மா வை 1948ல் ஆர் எஸ் எஸ் கயவன் கோட்சே சுட்டுக் கொலை செய்தான். அதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம். அன்றே இந்த ஆர் எஸ் எஸ் யை அழித்த்திருந்தால் நம் தேசத்தில் எந்த அச்சுறுத்தலும் தீவிரவாதமும் இருந்திருக்காது. நாட்டில் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புகளுக்கும் நாசவேலைகளுக்கும் ஆர் எஸ் எஸ் தான் காரணம் என்பதை நாடே நன்கறியும். ஆர் எஸ் எஸ் யை அழித்து விட்டால் பாருகுள்ளே நல்ல நாடு நம் பாரத நாடுதான்.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்