இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ராசாவுக்கு எதிரான வழக்கு - திங்களன்று விசாரணை!

E-mail அச்செடுக்க
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு 1.78 இலட்சம் கோடி வருமான இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அ.ராசாவுக்கு எதிரான இரண்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அமைச்சரவையில் இருந்து ராசாவை நீக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி வருவதால், ராசாவின் நீக்கம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதைத் தொடர்ந்து, ராசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் சந்தித்துப் பேசினர். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, சோனியாகாந்தியின் அரசியல் செய்தியாளர் அகமது பட்டேல் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே அமைச்சர் ராசா, தமிழக முதல்வர் கருணாநிதியை இரண்டாவது முறையாக சென்னையில் சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதியின் கடிதத்துடன் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் இன்று டில்லி புறப்பட்டுச் சென்றார்.

திங்கள் கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் ராசாவுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதால், திங்கள் கிழமை மதியத்திற்குப் பின் ராசா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்