இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பதவி விலகினார் ராசா!

E-mail அச்செடுக்க
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலகினார். தனது தலைவரின் ஆலோசனையின் பேரில் ராஜினாமா செய்ததாக ராசா தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 1.78 இலட்சம் கோடி ரூபாய்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியதைத் தொடர்ந்து, தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து ராசா பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஞாயிற்றுக் கிழமை மாலை வரை கூறி வந்த ஆ.ராசா ஞாயிற்றுக் கிழமை இரவு பிரதமரைச் சந்தித்து தன்னுடைய பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.

மத்திய அரசுக்கு பாதுகமான சூழல் உருவாவதைத் தவிர்க்கவும் நாடாளுமன்றத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தவும் என்னுடைய தலைவர் (திமுக தலைவர் கருணாநிதி) என்னை பதவி விலக அறிவுறுத்தினார் என்று ஆ. ராசா கூறியுள்ளார்.
கருத்துக்கள் (2)Add Comment
0
...
எழுதியவர்: S.Chandrasekaran, November 14, 2010
ithu amma vachcha aappu.
0
...
எழுதியவர்: செந்தில், November 16, 2010
aduthu rasavukku kappu

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்