இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மத்திய அமைச்சர்களின் சொத்துவிபரங்கள் இணையத்தில் வெளியிட ஏற்பாடு!

E-mail அச்செடுக்க

இன்னும் ஓரிரு நாள்களுக்குள் தனது அமைச்சரவை சகாக்களின் சொத்துபத்து விபரங்களை அரசின் பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிட பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.

ஒளிவு மறைவற்ற தன்மையை கருத்தில் கொண்டு இம்முடிவை பிரதமர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.அமைச்சர்களின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படுமாம். பிரதமர் அலுவலகத்துக்கான இணைய தளத்தில் இது வெளியிடப்படுமாம். 

அமைச்சர்களின் சொத்து விவரங்களைப் பெற்று இணையதளத்தில் வெளியிட பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ள நடுவண் அரசின் அமைச்சரவை செயலர் கே.எம். சந்திரசேகர் என்பார் இது தொடர்பாக அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்