இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஸ்பெக்ட்ரம் பிரச்சனை குறித்து பிரதமர் அறிக்கை இல்லை : அரசு!

E-mail அச்செடுக்க
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்கோ அல்லது இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமரின் அறிக்கை சமர்ப்பிக்கவோ முடியாது என அரசு கூறியுள்ளது. நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்தவிடாமல் தடுக்கும் எதிர்கட்சிகளையும் அரசு சாடியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் ஏன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் இதுகுறித்துப் பேச குறிப்பிட்ட அமைச்சருக்கும் உரிமை உண்டு. இதுகுறித்துப் பேச ராஜா விரும்பினால் அவர் பேசிக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் போது பாதுகாப்புத்துறையில் நிகழ்ந்த ஊழல்களை தெஹல்கா அம்பலப்படுத்திய பின், பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் பதவி விலகியபோது, அது குறித்து வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தாரா என்றும் பிரணாப் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்