இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தமிழ் படத்தின் ஹீரோவாக ஒபாமா!

E-mail அச்செடுக்க
அமெரிக்கா அதிபர் ஒபாமா அறிந்தோ அறியாமலோ தமிழ் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாகத் தோன்ற உள்ளார்.

கேடர்பாளையம் என்ற தமிழக கிராமத்தில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் நாயகன் அமெரிக்க அதிபர் ஒபாமா. ஒபாமாவைப் புகழ்ந்து இரண்டு பாடல்களும் இப்படத்தில் உள்ளனவாம்.

ஒபாமா எப்படித் தோன்றுவார்? நிஜ ஒபாமாவுக்குப் பதில் அவரது கட்அவுட்களும் போஸ்டர்களும் படத்தில் இடம்பெறுமாம்.

"ஓம் ஒபாமா" என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஊடகவியலாளராக இருந்து திரைத்துறைக்குச் சென்றுள்ள ஜானகி விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து அதன் பாதிப்பு திரூப்பூர் அருகில் உள்ள இந்த கிராமத்திற்கும் வந்து சேர்கிறது. ஒபாமா வெற்றி பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமின்றி இக்கிராமத்தின் பொருளாதாரமும் ஏற்றம் பெறும் என்பதற்காக "ஓம் லாபம்" என்று எழுதுவதைப் போல், "ஓம் ஒபாம" என்று எழுதி பிரார்த்தனை செய்கிறார்கள் இக்கிராம மக்கள். இது மட்டுமின்றி காதல், அரசியல் எனவும் கதைக்களம் செல்கிறது.

ஒபாமா வெற்றி பெற்றார். படம் வெற்றி பெறுமா?
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்