15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் யார் என்பதை டாடா குழுமத் தலைவர் ரட்டன் டாடா வெளியிட வேண்டும் என்று விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் சி.எம். இப்ராஹீம் கோரியுள்ளார்.டாடா குழுமம் சார்பாக உள்நாட்டு விமானச் சேவை தொடங்க 15 கோடி ரூபாய் முன்னாள் அமைச்சர் ஒருவர் கேட்டதாக டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா கூறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போதைய விமானப் போக்குவரத்து அமைச்சர்தான் லஞ்சம் கேட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக பாஜக ஆட்சியின்போது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சி.எம். இப்ராஹீமிடம் என்டிடிவி கருத்து கேட்டபோது, லஞ்சம் கேட்ட அந்த அமைச்சர் யார் என்பதை ரட்டன் டாடா வெளியிட வேண்டும். இதனை வலியுறுத்தி பிரதமருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். பிரதமர் இதுவிசயத்தில் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இப்ராஹீம் கூறியுள்ளார்.
மற்றொரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், லஞ்சம் கேட்ட அமைச்சரின் பெயரை வெளியிடுவது டாடாவின் விருப்பம் என்று இப்ராஹீம் கூறியுள்ளார்.
2001ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்காக டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து முயன்றது. ஆனால் அப்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அரசியல் ரீதியான எதிர்ப்புகள் இருப்பதால் ஏர் இந்தியாவை விற்கும் முடிவைக் கைவிட்டது.
இந்தி விமானச் சேவை நிறுவனத்தில் வெளிநாட்டு விமான நிறுவனம் முதலீடு செய்வதற்கு தன்னுடைய பதவிக்காலத்தில் அரசின் கொள்கை இடம் அளிக்கவில்லை என்று இப்ராஹீம் கூறியுள்ளார்.
ரட்டன் டாட்ட அவர்களிம் நீங்கள் (டாடா குழுமம்) மட்டும் வாருங்கள். வெளிநாட்டுப் பங்குதாரர்கள் எவரையும் அழைத்துவராதீர்கள் என்று நான் கூறினேன். அரசின் இந்தக் கொள்கை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அரசுக்கு சேமித்துக் கொடுத்தேன் என்றும் இப்ராஹீம் கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




