இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை தொடர்ந்து பொதுமக்கள் குடியிருப்பு களுக்குள் மழை நீர் புகுந்தது. எனவே வீடுகளை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ளத்தால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே, வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் பல தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு சுமார் ஒரு மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் புகுந்து தேங்கியுள்ளது. இதை தொடர்ந்து அவசரமாக கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க எம்.பி.க்கள் கடற்படை படகுகளில் பாராளுமன்ற கூட்ட்த்துக்கு அழைத்து வரப்பட்டனர். கொழும்பில் கடந்த 1992-ம் ஆண்டு இது போன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது அதனை தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




