இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கர்ப்ப காலத்தில் 'செல் பேசி'னால் குழந்தையைப் பாதிக்கும்

E-mail அச்செடுக்க

கர்ப்ப காலத்தில் செல் பேசி உபாயோகிப்பதால் கருவிலிருக்கும் சிசுவுக்குப் பெருத்த பாதிப்புகள் ஏற்படுவதாக கலிஃபோர்னியா பல்கலை கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

செல்(லிடப்)  பேசிக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழக  பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குழுத் தலைவர் பேரா. லீகா கெய்பட்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

"செல் பேசி  மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக செல் பேசி பயன்படுத்தினால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பாதிப்படைகின்றனர்  என தெரிய வந்துள்ளது.

ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர். இதற்கு அவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக செல் பேசி பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: latha, March 31, 2011
கர்ப்பகாலத்தில் உனவுகல்

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்