இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காஷ்மீரில் சகோதரிகள் சுட்டு கொலை !

E-mail அச்செடுக்க

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக சொல்லப்படுகின்றது. 

 

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள சோபோர் என்ற பகுதியைச் சேர்ந்த குலாம் நபி தார் என்பவரது மகள்கள் அரியா  (வயது 18) மற்றும் அக்தர்  (16). இவர்கள் இருவரும் நேற்று இரவு சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். 

உள்ளூரைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 3 தீவிரவாதிகள் வீட்டுக்குள் புகுந்து அரியா மற்றும் அக்தர் இருவரையும் அங்கிலிருந்த தர்காவின் அருகே இழுத்து சென்று சுட்டுக் கொன்றதாகவும் அவர்கள் இருவரது உடலையும் அங்கேயே போட்டு விட்டு தீவிரவாதிகள் தப்பி விட்டதாகவும் கூறப்படுகின்றது. போலீசுக்கு தகவல் சொல்பவர்களாக இருக்கலாம் என கருதி சகோதரிகள் இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது. 

போலீசாரும், இந்திய இராணுவத்தினரும் காஷ்மீரில் கற்பழிப்பு, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதும், அவற்றிலிருந்து தப்பிபதற்காக தாக்குதலுக்கு உள்ளானவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது அல்லது அவற்றை செய்தது தீவிரவாதிகள் என்று கூறி தீவிரவாதிகளின் தலையில் சுமத்திவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்வது என்பதும் வாடிக்கையான செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்