இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பி.காம்.(ஹானர்ஸ்), படிப்பு சென்னை பல்கலையில் துவக்கம்!

E-mail அச்செடுக்க
சென்னை பல்கலையில் வரும் கல்வியாண்டில் பி.காம்., (ஹானர்ஸ்) படிப்பு துவக்கப்படும் என துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

"தொழில் முனைவோரை உருவாக்க சென்னை பல்கலையில் பி.காம்.,(ஹானர்ஸ்) படிப்பு துவக்கப்படும்,'' என துணைவேந்தர் திருவாசகம் பேசினார். மதுரை திருப்பாலை யாதவா கல்லூரி ஆண்டு விழா நடந்தது. தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். முதல்வர் கண்ணன் அறிக்கை வாசித்தார்.

துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது: இந்தியாவிற்கு 300 ஆண்டுகளாக கிடைக்காத மரியாதை தற்போது கிடைக்கிறது. இளைஞர்களில் 15 முதல் 35 வயதிற்குட்பட்டோருக்கு அறிவு, திறமைசாலி, கடின உழைப்பு, ஆங்கில ஞானம் உள்ளதே காரணம்.

உலகத்தரவரிசையில் முதல் 10 இடங்களில் நான்கு இந்திய நிறுவனங்கள், ஏழு தொழில் முனைவோர், பணக்காரர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். குக்கிராமங்களுக்கு கூட தகவல் தொடர்பு வசதி கிடைத்துள்ளது.

ஆனால், 31 கோடி பேருக்கு மாதம் 545 ரூபாய்தான் சம்பளம் கிடைக்கிறது. ஒரு வேளை உணவிற்கே சிரமப்படுகின்றனர். தினமும் ஒரு கோடி குழந்தைகளுக்கு இரவு உணவு கிடைக்காமல் தூங்கச் செல்கின்றனர். வறுமையை போக்க ஆசிரியர்கள், மாணவர்கள் சிந்திக்க வேண்டும். கலை படிப்பு படித்திருந்தாலும் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும்.

சென்னை பல்கலையில் வரும் கல்வியாண்டில் பி.காம்., (ஹானர்ஸ்) படிப்பு துவக்கப்படும். இரண்டு ஆண்டுகள் வகுப்பறை கல்வி, மூன்றாம் ஆண்டில் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட 20 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் கல்லூரிகள் இப்படிப்பை துவக்கலாம் என்றார்.செயலாளர் நவநீதகிருஷ்ணன், இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் ரம்யம் பாண்டியன் பங்கேற்றனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்