லிபியாவில் அரசு எதிர்ப்பு படைகள் வீழ்ச்சிக்கு அருகாமையில் இருக்கும்போது அவற்றிற்கு உதவும் வகையில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து லிபியாவின் மீது தாக்கியது பல மில்லியன் டாலர்கள் செலவு பிடிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
குறிப்பாக லிபிய அதிபர் முஅம்மர் கடாபியின் வான் எதிர்ப்பு வேகத்தினைக் குறைத்து மதிப்பிடப்படுவதும் இதனுடன் இணைந்துள்ளது. நேற்று முன்தினம் வரை அமெரிக்க-ஐரோப்பிய படைகள் 1.5 மில்லயன் மதிப்புள்ள சுமார் 162 டோம்ஹாக் வகை ஏவுகணையை செலுத்தியுள்ளது.
லிபியாவின் இலக்குகளின் மீது சுமார் 2000 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை வீச மிஸ்ஸௌரியிலிருந்து B2 வகை குண்டுவீச்சு விமானங்களை ட்ரிப் அடித்ததில் ஒரு மணிநேரத்திற்கு 10000 டாலர் என்ற கணக்கில் 25 மணி நேர செலவு. இது ஒரு சாம்பிள் தான்.
இந்த B2 வகை குண்டுவீச்சு விமானங்கள் மிக உயர்ரக பெட்ரோலைக் குடிப்பதுடன் விமான தளத்திற்கு வந்தவுடன் அதன் எதாவது ஒரு பகுதியை மாற்றி ஆகவேண்டியிருக்கும்.
இதுமட்டுமல்லாமல், அணியணியாக அமெரிக்க யுத்த விமானங்கள், மத்திய தரை கடலில் நுழைந்துள்ள மூன்று நீர்மூழ்கி கப்பல்கள், இரண்டு நாசகாரி உள்ளிட்ட பதினொரு போர்க்கப்பல்கள்... சமீபத்தில் விழுந்து சிதறிய ஒரு F15 பைட்டர் ஜெட் (அது மட்டும் 75 மில்லியன் டாலர்) இதுவெல்லாம் சேர்ந்து அமெரிக்க ஐரோப்பிய சட்டவடிவமைப்பாளர்களை இப்பவே கண்ணை கட்ட செய்வதாக வரும் ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




