இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

லிபியாவின் ‘தலையெழுத்தை’ நிர்ணயிக்க சர்வதேச மாநாடு!

E-mail அச்செடுக்க

லிபியாவின் சிக்கலுக்கு தீர்வுகாணும் விதமாக சர்வதேச மாநாடு வரும் மார்ச் 29-ம் தேதி லண்டனில் துவங்கவுள்ளது.

 

லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இவர்களது போராட்டத்தை அடக்க இராணுவத்தை தூண்டிவிடார் அதிபர் கடாபி. இதி ஏராளமான பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்தது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் கலகக்காரர்களுக்கு ஆதரவாக லிபிய இராணுவத்தினரை எதித்து தாக்குதலை துவங்கியுள்ளனர்.

லிபியா விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள், தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க வியூகம் வகுத்துள்ளன.

லிபியாவில் சிக்கலுக்கு தீர்வுகாணும்விதமாக சர்வதேச மாநாடு வரும் மார்ச் 29-ம் தேதி லண்டனில் துவங்கவுள்ளது. இதில் அரபு, ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கலந்து கொள்ளவுள்ளன என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சபையில் பிரிட்டன் வெளியுறவு ‌அமைச்சர் வில்லியம் ஹோக் நேற்று தெரிவித்தார்.

மேலும் விரைவில் லிபியாவை நேட்டோ படைகள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார். அதற்குள் கடாபி தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்