இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெனாசிர் படுகொலை:முக்கிய குற்றவாளி கைது:பாக்.உள்துறை அமைச்சர் தகவல்!

E-mail அச்செடுக்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனசிர்பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 28-ம தேதியன்று ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டு்க்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மேலும் அவர் தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டிருககலாம் என்ற சந்தேகமும் அந்நாட்டு தேசிய புலனாய்வு ஏஜ‌ஜென்சி கருதுகிறது. ‌‌தக்ரிக்-இ-தலிபான் என் அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய நிர்வாகக்குழுக்கூட்டம் , உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தலைமையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய மாலிக் , பெனாசிர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக , அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக கொலை நடந்த அன்று சிக்கியுளள வீடியோ ஆதாரம் சிக்கயிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்