இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

புட்டோ தூக்கிலிடப்பட்ட வழக்கு பாக்கிஸ்தானில் மறு பரிசீலனை!

E-mail அச்செடுக்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்ட வழக்கினை மீண்டும் விசாரணை நடத்த பாகிஸ்தான்அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியில் நடந்த தேர்தலில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜூல்பிகர் அலி பூட்டோ முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். எனினும் அப்போதைய அதிபராக ஜியா-உல்ஹாக், கடந்த 1977-ம் ஆண்டு பூட்டோவின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவ ஆட்சி நடத்தினார். பின்னர் கடந்த 1979-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி ஜூல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டார்.

 

இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையில் பூட்டோ தூக்கிலிடப்பட்ட வழக்கினை மீண்டும் மறு விசா‌ரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட, லாகூர் கோர்ட்களில் மனு செய்திருந்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது பூ்ட்டோ தூக்கிலிடப்பட்ட வழக்கு மீண்டும் மறுவிசாரணை செய்யப்படவுள்ளது. இது குறித்து தகவல்த்துறை அமைச்சர் பர்‌டோயிஸ் ஆஷிக் அவான் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்ட அமைச்சர் பாபர் அவானிடம் வழக்கு குறித்த ஆவணங்கள் மற்றும் விவரங்கள் உள்ளது. இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தபின் முடிவு ‌செய்யப்படும் என்றார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்