இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தலிபான் கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 24 பேர் பலி!

E-mail அச்செடுக்க

ஆப்கானிஸ்தானில் கட்டுமானப்பணிகள் நடந்து வந்த பகுதியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாயினர்.

 

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள பட்டிகா மாகாணம் இங்குள்ள பெர்மால் மாவட்டத்தில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. இப்பகுதி தலிபான்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

சம்பவத்தன்று இப்பகுதிக்கு மர்ம லாரி ஒன்று வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு கட்டடப்பணிகள் நடைபெறும் ‌ நுழைவு கேட்டினை இடித்து தள்ளிவிட்டு உள்ளே புகுந்தது. அப்போது கட்டுமானத்தொழிலாளர்கள் மீது மோதிய வெடித்தது. இதில் காவலாளி உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 53 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த கோர சம்பவத்திற்கு அதிபர் ஹமீத் கர்சாய், பட்டிகா மாகாண கவர்னர் மெஹபுல்லா சமீம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்