தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலை கழகங்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan போன்ற மேற்படிப்புகளளப் படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்தத் தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதன் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம்.
பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech, MCA போன்ற பட்ட மேற்படிப்புகளைப் படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்குப் பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வலியுறுத்துங்கள். இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுமாறு கூறுங்கள். இத்தேர்வு எழுதி வெற்றி பெறுவதன் மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு தரமான கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு இலகுவாக கிடைப்பதால், எதிர்காலத்தில் நல்ல சம்பளத்தில் உயர் பணிகளும் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
TANCET தேர்வு பற்றிய முழு விபரங்கள் அடங்கிய கையேட்டை அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்குத் தயாராகுபவர்கள் முதலில் இக்கையேட்டைத் தரவிறக்கி நன்றாக ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.
TANCET நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தின் அனைத்து உதவி மையங்களிலும் கிடைக்கும். மாவட்ட வாரியாக கிடைக்கும் இடங்களின் விபரம் விளக்கக் கையேட்டில் விபரமாக உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய : www.annauniv.edu/tancet2011 என்ற இணையதளத்தை அணுகவும்(ஏப்ரல் - 1 முதல் ஏப்ரல் 25 வரை மட்டுமே ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க இயலும்).
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 27/04/2011
தேர்வு கட்டணம் : ரூ.300
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Secretary,
TANCET Examination Centre,
Anna University,
Chennai - 600 025.
உடனடி விண்ணப்பம் (Spot Registration): தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தின் எல்லா மையங்களிலும் விண்ணப்பம் சமர்ப்பித்து உடனடியாக ஹால் டிக்கெட் (Hall Ticket) பெறலாம். விண்ணப்பம் சரிபார்த்து ஏற்றுக்கொள்ளப்பட, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் சாதி சான்றிதழ்கள் கொண்டு செல்ல வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதிகள் :
M.E/M.Tech - 29/05/2011 (காலை)
MBA - 28/05/2011 (காலை)
MCA - 28/05/2011 (மாலை)
M.Arch/M.Plan - 29/05/2011 (காலை)
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : ஜூன் 3-வது வாரம்.
M.E/M.Tech படிக்க தகுதிகள் : B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/Geography/Geology/Electronics etc....) படித்தவர்கள். இப்படிப்புகளில் இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MBA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள்; பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிலுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MCA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2 - ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிலுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
M.Arch/M.Plan படிக்க தகுதிகள் : B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிலுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வை பற்றிய முழுவிபரங்களும் அண்ணா பல்கலை கழகத்தின் www.annauniv.edu/tancet2011 இணையதளத்தில் உள்ளது. 2011-12 ஆம் ஆண்டுக்கான நுழைவு தேர்வு குறித்து அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டுள்ள விளம்பரத்தை இங்கிருந்து தரவிறக்கிக் காணலாம்.
மேலும் விபரங்கள் அறியவும், தேர்வைப் பற்றிய சந்தேகங்களுக்கும், தேர்விற்குத் தயாராகும் வழிமுறைகள் பற்றி அறியவும் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
- S. சித்தீக் M.Tech

| < முந்தையது | அடுத்தது > |
|---|




