இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தயாரிப்பாளர் ஆகிறார் ஏ.ஆர்.ரகுமான்!

E-mail அச்செடுக்க

ஆஸ்கார் விருதை வென்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு   இசையமைத்துள்ளார். ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார். அடுத்த கட்டமாக திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.  

இதற்காக ”ஒய்.எம். மூவிஸ்” என்ற பெயரில் புதிய திரைப்படக்கம்பெனி ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரிக்கப்போகிறார். முதலாவதாக தமிழ் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக புது இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பார் எனத் தெரிகிறது.    

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்