ஐவரி கோஸ்ட் நாட்டில், கொலை செய்யப்பட்ட 100 உடல்கள், கடந்த 24 மணிநேரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதில் பலரது உடல் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதற்கான அடையாளங்களுடன் காணப்பட்டுள்ளன. லைபீரிய அயல்நாட்டுக் கூலிப்படையினர் இந்த கொடூரமான கொலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த வன்முறை இனரீதியான காழ்ப்பினால் உருவாகியிருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் ரூபர்ட் கால்வில் தெரிவித்துள்ளார். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டும், மற்றும் சிலர் கிணற்றில் தள்ளப்பட்டும், கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டில் சண்டை வலுத்து பரவி வருவதால், அந்நாட்டிற்கான இந்திய தூதர் ஷம்மா ஜெயின் மற்றும் அலுவலர்கள், வியாழன் அதிகாலை வேளையில் ஐ.நா. அமைதிப் படை மற்றும் ஃபிரன்ச் படையின் உதவியுடன், தூதரகத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




