இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெலரோஸ் நாட்டின் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி!

E-mail அச்செடுக்க

பெலரோஸ் நாட்டின் மெட்ர‌ோ ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தில்  11 பேர் பலியாயினர். 90 பேர் படுகாயமடைந்தனர்.

 

பெலரோஸ் நாட்டின் மனி்சிக் நகரில் உள்ள ஒகாயாபிரஸ்காய மெட்ரோ ரயில்நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.அப்போது பணிமுடித்து விட்டு ஏராளமான ‌பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு ரயில்கள் சேதமடைந்தனர். மேலும் பயணிகள் உபயோகப்படுத்தும் எஸ்கலேட்டர் சேதமடைந்தது. 90 பேர் படுகாயமடைந்ததாகவும், இதில் 50 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அதிபர் அலெக்ஸாண்டர்லுகோஸ்வகி, அவரசமாக மந்திரிசபையினை கூட்டி விவாதித்தார். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவசிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பது குறித்து தகவல்இல்லலை.

எனினும் இதேபோன்று மின்சிக் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு  நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50 பேர் பலியாயினர். 120 பேர் காயமடைந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்