இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பார்லிமென்டில் ஃபலானா படம் பார்த்த எம்.பி. ராஜினாமா!

E-mail அச்செடுக்க

இந்தோனேசியாவில் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது, சாவகாசமாக தனது கையடக்க லேப்டாப்பில், ஃபலானா படம் பார்த்துக் கொண்டிருந்த எம்.பி. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 


இந்தோனேசியா பார்லிமென்ட் உறுப்பினர் அர்பின்டோ (வயது 50). இவர் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது, சாவகாசமாக தனது கையடக்க லேப்டாப்பில், ஃபலானா படம் பார்த்துக் கொண்டிருந்ததை புகைப்படக்காரர் ஒருவர் போட்டோ எடுத்தார். இப்படம் உலகம் முழுவதும் பரவி அவரை சர்ச்சைக்குள்ளாக்கியது.

தனது குட்டு  வெளிப்பட்டதை அடுத்து அர்பின்டோ அவசரமாக, உடனடியாக பதவியை ராஜினாமா செய்தார். இந்தோனேசியா சட்டத்தின் படி அர்பின்டோவிற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க  வாய்ப்புள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்