இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பாகிஸ்தான் சிறையில் வாடிய 89 இந்திய மீனவர்கள் விடுதலை!

E-mail அச்செடுக்க

இந்தியா - பாகிஸ்தான்  இடையேயான சர்வதேச கடல் எல்லையில் அத்து மீறி நுழைந்ததாக 89 இந்திய மீனவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு மற்றும் 2010-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான்  கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 89 இந்திய மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவும் பொருட்டும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இரு நாட்டு வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டு மீனவர்களை விடுவிப்பது என தீர்மானிகப்பட்டது.

அதன்படி கடந்த 11-ம் தேதி இந்திய சிறைகளில் இருந்த பாகிஸ்தான்  மீனவர்கள் 39 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதே போன்று பாக்கிஸ்தான் சிறையில் இருந்த 89 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இத்தகவலை காரச்சியில் உள்ள மாலீர் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் குலாம் காதிர் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர்கள் லாகூர் வழியாக வாகா இந்திய எல்லைக்குள் வருகின்றனர். இது குறித்து சிறை கைதிகளுக்கான நல சட்ட உதவி கமிட்டியின் தலைவர் நஸீர் அஸ்லம் ஜாகித் கூறுகையில், மேலும் 33 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என்றார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்