இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இயக்குனர் பாலசந்தருக்கு தாதா சாஹேப் ஃபால்கே விருது!

E-mail அச்செடுக்க

திரைப்படத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாஹேப் ஃபால்கே விருதுக்கு, பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்து சேவையாற்றியவர்களுக்கு அளிக்கப்படும் தாதா சாஹேப் ஃபால்கே விருது, ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது. 

2010ஆம் ஆண்டிற்கு, பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலசந்தர் (வயது 81), தேர்வு செய்யப் பட்டுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. தாதா சாகேப் விருதுக்கு குழு, பாலசந்தரின் பெயரை தேர்வு செய்துள்ளது.

தாதா சாஹேப் ஃபால்கே விருது, தங்கத் தாமரை பதக்கத்தையும், 10 லட்ச ரூபாய் ரொக்க பரிசையும் கொண்டது. இயக்குனர் கே.பாலசந்தர் நாடகத் துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த எழுத்தாளர் ஆவார். இவர் எம்.ஜி.ஆர். நடித்த ’தெய்வத் தாய்’ படத்திற்கு கதை வசனம் எழுதி திரையுலகில் அடியெடுத்த வைத்தவர். பாலசந்தர் இயக்கிய முதல் தமிழ்த் திரைப்படம், நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடித்த 'நீர்க்குமிழி'.

முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்த ‘நாணல்’, செளகார் ஜானகி நடித்த ‘இரு கோடுகள்’, ‘காவியத் தலைவி’, ஜெயசங்கர் நடித்த ‘நூற்றுக்கு நூறு’ ஆகியன  இரசிகர்களின் பேராதரவுடன் ஓடிய திரைப்படங்கள் ஆகும். நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு பாலசந்தர் இயக்கிய ‘பாமா விஜயம்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகமாக வெற்றி பெற்று திரைப்படமாகவும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.

ரஜினி காந்தை அறிமுகப்படுத்திய அபூர்வ இராகங்கள், புன்னகை மன்னன், தில்லு முல்லு, நிழல் நிஜமாகிறது, சிந்து பைரவி, புது புது அர்த்தங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கன. இதில் சிந்து பைரவி பெரும் வெற்றி பெற்றது.

திரைப்படங்கள் இயக்குவதில், தனக்கென தனி ஸ்டைலை பின்பற்றும் பாலசந்தர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய இரு கோடுகள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை ஆகிய படங்கள், சிறந்த படங்களுக்கான தேசிய விருதைப் பெற்றவை.

இவர், தெலுங்கில் இயக்கிய ருத்ரவீணா என்ற படம், நர்கீஸ் தத் தேசிய விருதைப் பெற்றது. கடந்த 1987ல், பத்ம ஸ்ரீ விருது இவருக்கு கிடைத்தது. இதுதவிர, ஏராளமான மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்