இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ரூ.45 லட்சம் கேட்டு நடிகர் வடிவேலுக்கு மிரட்டல்!

E-mail அச்செடுக்க
ரூ. 45 இலட்சம் கேட்டு நடிகர் வடிவேலுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக இணையதளம் ஒன்றின் ஆசிரியர் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கர் புதன் கிழமையன்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதியைச் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

"ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணையதளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த விருகம்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்