நடிகர் வடிவேலு மீது மாநகர காவல் ஆணையரிடம் இணைய தளம் ஒன்றின் ஆசிரியர் மோசடி புகார் அளித்துள்ளார்.நடிகர் வடிவேலு சார்பில் அவரது நிர்வாகி காவல் ஆணையரிடம் இரு தினங்களுக்கு முன்பு இணைய தள ஆசிரியர் செல்வகுமார் மீது புகார் அளித்தார். அதில் வடிவேலுவிடம் ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் காவல்துறை ஆணையரிடம் மோசடி புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007ஆம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ.4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்.
இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. கலை நிகழச்ச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன்.
இவ்வாறு அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




