இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயலட்சுமி

E-mail அச்செடுக்க
இயக்குநர் சீமான் மீது இனியேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜய லட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் நடித்த `பிரண்ட்ஸ்' படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் விஜயலட்சுமி. இவர், தனக்கும், `நாம் தமிழர் கட்சி' தலைவர் சீமானுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக, விஜயலட்சுமி, சனிக்கிழமையன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-

`எனக்கும், சீமானுக்கும் கடந்த 3 வருடங்களாக தொடர்பு இருந்தது. நானும் அவரும் நெருங்கி பழகினோம். புதுச்சேரியில் அவர் சிறையில் இருந்தபோது, எனக்கு பல கடிதங்களை எழுதினார். அதில், என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர் நடந்துகொள்ளாமல் என்னை ஏமாற்றிவிட்டார்'.

மதுரையில் நானும், அவரும் ஒரு ஓட்டலில் தங்கியபோது கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றியதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கூறியிருந்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு இப்போது பல மிரட்டல்கள் வருகிறது. சீமான் ஆட்கள், என்னை மிரட்டுகிறார்கள். `இனிமேலாவது சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: kamar, July 17, 2011
medai kelia pesum seman etharkku enna solla pugirar

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்