இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ரூ.75 லட்சம் மோசடி புகார்: சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு

E-mail அச்செடுக்க
சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது ரூ.75 லட்சம் மோசடி செய்ததாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனா மீது காவல்துறையினர் 5 மோசடி வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரது உதவியாளர் அய்யப்பனும் அதே வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் சக்சேனாவுக்கு பிணை கிடைத்தது. அந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றமும் புகார்தாரர் கேட்டுக்கொண்டதன்பேரில் ரத்து செய்துவிட்டது. தற்போது சக்சேனா, அய்யப்பன் ஆகிய இருவர் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், `முத்துக்கு முத்தாக' படத்தின் தயாரிப்பாளர் ராசு மதுரவன், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் மீது புதிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. `முத்துக்கு முத்தாக' படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ரூ. 1.25 கோடிக்கு வாங்கினார்கள் என்றும், ரூ.50 லட்சம் தந்துவிட்டு, மீதி ரூ.75 லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாக கொடுத்த புகாரின்பேரில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கிலும் அவர்கள் இருவரும் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சக்சேனாவின் வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்