புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று இரண்டு தீவிரவாத குழுக்களின் மின்னஞ்சல் அனுப்பியுள்ள நிலையில் அந்த மின்னஞ்சல்களின் உண்மைத்தன்மையை அறிய வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களின் உதவி நாடப்படுள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 13 பேர் பலியாயினர். இச்சம்பவத்துக்கு ஹுஜி மற்றும் இந்தியன் முஜாகிதீன் அமைப்புகள் பொறுப்பேற்று இ&மெயில் அனுப்பியுள்ளன. இதன் உண்மை நிலவரம் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி ஆய்வு செய்து வருகிறது. விசாரணையில் துப்பு கிடைக்காததால், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு உளவுத்துறைகளின் உதவியை தேசிய புலனாய்வு குழு நாடியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைப்பற்றி வெளிநாட்டு உளவுத்துறை ஏஜென்சிகளுக்கு ஏதாவது தகவல் கிடைத்தால், அதை தெரிவிக்கும்படி இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், ‘டெல்லி குண்டு வெடிப்பு பற்றி கிடைக்கும் அனைத்து தகவல்களும் கவனமாக ஆராயப்படுகிறது. இதுவரை உறுதியான எந்த துப்பும் கிடைக்கவில்லை என்பதால், வெளிநாட்டு உளவுத்துறைகளின் உதவி கேட்கப்பட்டுள்ளது’ என்றார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (3)

எழுதியவர்: yaserfirdousi, September 13, 2011
"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 5:32
எழுதியவர்: கிருஷ்னன், September 13, 2011
இந்தியாவில் நடக்கும் பல குண்டு வெடிப்புகளுக்கு முக்கிய காரணம் சங்பரிவார அமைகளும் அதற்கு பின் புலமாக இருக்கும் இஸ்ரேல் உளவு துறையும்தான் என்பது பெரும்பாலனவர்கள் அறிந்ததே.
ஆகையால் இஸ்ரேல் மற்றும் அதன் சார்பில்லாத வெளிநாட்டு உளவு ஸ்தாபனங்களின் ஒப்பரடத்தால் உண்மை வெளிவரும்

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|