இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஏர் இந்தியா 10 மணி நேரம் தாமதம்! பயணிகள் ஆத்திரம்

E-mail அச்செடுக்க

சென்னை : சென்னையிலிருந்து மலேசியா கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 10 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஏர் இந்தியா விமான அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 146 பயணிகளுடன் மலேசியா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இரவு 9 மணிக்கெல்லாம் பயணிகள் வந்துவிட்டனர். குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் ஏற பயணிகள் தயாராக இருந்தனர். ஆனால் விமானி வரவில்லை. எனவே பயணிகளை விமானத்தில் ஏற்றாமல் அங்கேயே காத்திருக்கவைத்தனர்  இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அங்கிருந்த அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ‘விமானி வரவில்லை, அதனால் மாற்று விமானியை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் என்று அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தினர். 

 


ஆனாலும்  அதிகாலை 2.30 மணி வரை வேறு விமானிகள் யாரும் வரவில்லை. இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற பயணிகள், ஏர் இந்தியா அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக அதிகாரிகள் ‘காலை 10 மணிக்கு விமானம் புறப்பட்டுச் செல்லும், அதுவரை உங்களை ஒரு ஓட்டலில் தங்க வைக்கிறோம்.என்று சொகுசு பேருந்துகளில் அழைத்துச் சென்று சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைத்தனர். 

இதையடுத்து, காலை 10 மணிக்கு 146 பயணிகளும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் 10 மணி நேரம் தாமதமாக கோலாலம்பூருக்கு விமானம் புறப்பட்டது.  இச்சம்பவம், விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்