பிரபல நடிகை குஷ்பூ ராயப்பேட்டையில் உள்ள வணிக நிறுவனத்துக்கு சென்ற போது அங்குள்ள கடையில் மேஜையில் தமது விலை உயர்ந்த பிளாக் பெர்ரி,ஐ போனை வைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து திரும்பிப் பார்த்த போது மேஜையில் வைத்து இருந்த இரு செல்போன்களையும் காண வில்லையாம். கடைக்கு வந்த யாராவது தங்கள் கைவரிசையைக் காட்டி செல்போனைத் திருடி இருக்கக் கூடும் என்று தெரிகிறது.
தமது செல்போன் திருடு போனது குறித்து நடிகை குஷ்பூ அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கருத்துக்கள் (2)

எழுதியவர்: அடுத்த வாசகன், October 09, 2011
"நடிகையின் போன் திருட்டு , நாய் திருட்டு இதெல்லாம் இந்நேரத்துக்கு தேவையா ஐயா" ஆசிரியரைக் குறைச் சொல்லி பயனில்லை. நடிகை நாய்க்கு தான் நம் ஊர் வாசகர்களிடம் மோகம் அதிகம் இருக்கிறது. வளர்த்து விட்ட புரட்சித் தலைவரையே, பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி யிடம், போட்டுக் குடுத்த துரோகியை, 'நடிகை' என்ற ஒரே காரணத்திற்காகத் தானே முதல்வர் ஆக்கியிருக்கிறோம்.
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|





நடிகையின் போன் திருட்டு , நாய் திருட்டு இதெல்லாம் இந்நேரத்துக்கு தேவையா ஐயா? வழமைக்கு மாற்றாக இந்நேரம் பிற இணைய நாளிதழுக்கு காட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். தரம் தாழ்வதற்கும் நிறம் மாறுவதும் வேண்டாமே ஐயா..