இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மூவர் தூக்கு தொடர்பான வழக்கை மாற்றக் கோரும் மனு - வாத விபரம்!

E-mail அச்செடுக்க

மூவர் தூக்குக்குச் சென்னை உயர்நீதிமாற்றம் இடைக் காலத் தடை விதித்ததை அடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கபீர் மற்றும் டத்தோ ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் ராம்ஜெத்மலானி ஆஜராகி இந்த வழக்குக் குறித்த விசாரணை நீதிபதி சிங்வி முன்னிலையில் விசாரிக்கப் பட்டு விட்டதாகவும் தங்கள் தரப்புப் பதிலைத் தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக தர அவகாசம் கேட்டதால் தான் நீதிபதி சிங்வி இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்க வில்லை என்றும் தெரிவித்தார்.

ராம்ஜெத்மலானியின் வாதத்தைக் கேட்ட நீதிபதி கபீர் "நீதிபதி சிங்வி இந்த வழக்குக் குறித்த விசாரணையை முடித்து விட்டதால் இந்த வழக்கு இனி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்