நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை அதிமுக முதன்முறையாக கைப்பற்றியது. சென்னை மாநகராட்சியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி சுமார் 5.19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற சைதை துரைசாமியின் பதவியேற்பு விழா சென்னை ரிப்பன் மாளிகை கட்டட வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது. சென்னை மேயர் சைதை துரைசாமிக்குச் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சைதை துரைசாமி பதவியேற்றதை அடுத்து 200 மாநகராட்சிக் கவுன்சிலர்களும் பதவியேற்றனர். ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




