இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கனிமொழி இல்லாமல் சென்னை திரும்புகிறார் கருணாநிதி!

E-mail அச்செடுக்க

திகார் சிறையில் அடைக்கப் பட்டு இருக்கும் மகள் கனிமொழிக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் டெல்லி சென்ற கருணாநிதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

நேற்று கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் சி.பி.ஐ தரப்பும் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கை நவம்பர்  3 ம் தேதிக்கு ஒத்தி வைத்ததால் கனிமொழி தீபாவளியைச் சிறையில் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விட்டால் மகள் கனிமொழியுடன் சென்னை திரும்பலாம் என்று திட்டமிட்டு இருந்த கருணாநிதி வழக்கு ஒத்தி வைக்கப் பட்டதால் கனிமொழி இன்றி துணைவியார் ராசாத்தி அம்மாளுடன் இன்று சென்னை திரும்புகிறார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: Sheik, October 26, 2011
mama biskothu...... pimpilikee pilaapee

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்