தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று தம மகள் கனிமொழி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்து விட்டு நேற்று பிற்பகலில் சென்னை திரும்பினார். நேற்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு கருணாநிதி பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த திமுக தலைவர் கருணாநிதி '' சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக வாங்கிய வாக்கு 22 .30 %. நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டு 26 .09 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்காததால் தான் வாக்கு சதவீதம் அதிகரித்தது என்று கூற முடியாது, வாக்குகள் அதிகம் கிடைத்ததால் வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்து 4,5 மாதங்களே ஆன நிலையில் இவை அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் என்று அறிதியிட்டு உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (3)

எழுதியவர்: balu, October 26, 2011
I pity Mr Karunanidhi. He knows very well that he & his nepotism had done enough damage to DMK. Now his statement on 'increased percentage of votes' is really laughable. No body, including himself, will take this statement seriously.
எழுதியவர்: pandi, October 27, 2011
@balu
அப்பறம் என்ன இதுக்காக தாங்கள் பின்னுட்டம்யிட வேண்டும்.
செயலலிதா ஆதிமுகாவுக்கு செய்த கொடுமையயை விடவா?
கடவுளை மறுத்த பேரறிஞர் அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்துகொண்டு பூசெய்கள் செய்கிறாள், வேள்வி நடத்துகிறாள். சமச்சீர் கல்வியை புறக்கணிக்கிறாள் மேலும் அம்மையார் குழந்தைகளுக்கு சமற்கிருத பெயரை சுட்டி கொண்டாடுகிறாள்.
சோனியா காந்தி, இராகுல் காந்தி
போன்றோர்கள் பேராய/காங்கிரசு கட்சிக்கு செய்த கொடுமையை விடவா?
தான், தன் மனைவி, தன் மைத்துனன் மற்றும் தன் சாதியினாரல் நடத்தபடும் தேமுதிகாவை விடவா கலைஞர் குறைந்து போய்விட்டார்.
நான் கலைஞரின் தொண்டன் அல்ல ஆனால் ஒரு நடுநிலைவாதியாக பார்க்கும் போது
இவர் பரவாயில்லை என்றே சொல்லலாம். அவரின் கட்சியில் நடந்த ஊழல்
மற்றும் உறுப்படாத கட்சியின் கூட்டணி ஆகியவற்றை களை எடுத்தால்
திமுகா ஒரு நல்ல கட்சியே.

எழுதியவர்: Raja Md, October 28, 2011
திமுக ஒரு நல்ல கட்சி தான், ஆனா சமச்சிர் சமச்சீர் என்று சொல்லி கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது, தமிழகத்தில் எல்லோர்க்கும் வேலை கொடுக்கிறார்களா??? இல்லையே !!!அரபுநாட்டுக்கு வந்தால் தான் தெரியும், ஹிந்தி தெரியவில்லை என்றால் நீ இந்தியனா??? என்று கேட்கிறான் எல்லா மொழிகளையும் படித்தால் தவறு ஒன்றும் இல்லையே !!!!
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|