அப்பாவி ஒருவரின் வீட்டில் வெடிகுண்டுக்களை வைத்து விட்டுக் காவல்துறைக்குத் தகவல் கூறிய மர்ம நபரைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவுக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில், "கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
அப்போது "நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்", என்று கேட்டதற்குக் களியக்காவிளையில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். "களியக்காவிளையில் இருக்கின்ற உங்களுக்குக் கஞ்சா இருப்பது எப்படி தெரியும்?", என்று காவல்துறையினர் மேலும் விசாரித்த நிலையில் நண்பர் ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலையில் காவல்துறையினர் குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் வாசல் பகுதியில் நீல நிற பை ஒன்று காணப்பட்டது.
அதனைத் திறந்து பார்த்தபோது அதில் ஐடியல் டெட்டனேட்டர் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு பாக்ஸ், பேட்டரி பிட்டிங்ஸ் பாக்ஸ், ரெகுலேட்டர், வயர்கள் அடங்கிய ஒரு செட், 25 மீட்டர் நீள திரி, 2 கிலோ யூரியா, 2 ஜெலட்டின் குச்சிகள் ஆகியன அதில் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவற்றைக் கைப்பற்றி கொல்லங்கோடு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வீடு தூத்தூரை சேர்ந்த கீதன் என்பவருக்க்ச் சொந்தமானது. அவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தற்போது இந்த வீட்டில் குலசேகரம் கொச்சுவீட்டு பாறை பகுதியைச் சேர்ந்த ஜெயகென்னடியும் அவர் மனைவி விஜியும் வசித்து வருகின்றனர்.
ஜெய கென்னடி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விஜி அந்தப் பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 மாதம் முன்புதான் ஜெயகென்னடி ஊருக்கு வருகை தந்திருந்தார். மனைவிக்குத் திருவனந்தபுரத்தில் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கு வசதியாக இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
சம்பவம் தொடர்பாக கொல்லங்கோடு காவல்துறை ஆய்வாளர்(பொறுப்பு) நல்லக்கண்ணு விசாரணை நடத்தி வருகிறார்.
ஜெயகென்னடியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீட்டில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வெடிபொருட்கள் வைக்கப்பட்டதற்கான தடயங்களையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கியூ பிராஞ்ச் டிஎஸ்பி சந்திரபால், நாகர்கோவில் டிஎஸ்பி பாஸ்கரன், கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சுகிர்லால் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
இதனைப் போன்று தக்கலை காவல் நிலையத்திற்கும் இன்று காலையில் பேசிய ஆசாமி ஒருவர் இதே கஞ்சா இருக்கின்ற தகவலைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பேசிய நபரைக் காவல்துறையினரால் அடையாளம் காணமுடியவில்லை. அவரது தொலைபேசி எண்ணோ, பெயரோ எஸ்.பி அலுவலகத்தில் கண்டறியப்படவில்லை.
மர்ம நபர் கொடுத்த தவறான தகவலை ஆராய்வதற்குள் பத்திரிகைகளில் அத்வானி ரத யாத்திரையின் போது கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுடன் இதைத் தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. இதனால் கென்னடி வீட்டில் வெடிகுண்டு பையை வைத்து சென்றது யார் என்பது குறித்த விசாரணை திசை திருப்பப்பட்டுள்ளது.

எழுதியவர்: jan, October 31, 2011
எழுதியவர்: seyed, October 31, 2011
இந்தியர்களே! என் போன்றவர்கள் இவ்வாறு கருத்திடுவதை எப்பொழுது மாற்றியமைக்கப் போகிறீர்கள்??? ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.
நான் ஐரோப்பாவில் இருந்து இந்தியனல்லாத ஒரு முஸ்லிம்
| < முந்தையது | அடுத்தது > |
|---|




